Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து பூஜை நடத்திய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்து பூஜை நடத்திய இளைஞர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

இந்தியாவிற்கு 2 நாட்கள் அரசு பயணமாக வருகின்ற 24 ஆம் தேதி வர இருக்கும் அமெரிக்க அதிபரை சிலை வைத்து, பூஜை நடத்தி புதிய வகையில் வரவேற்பு நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜங்காவ் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், இந்திய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்கும் வகையில் மோடி மற்றும் டிரம்ப் படங்கள் மற்றும் இந்திய, அமெரிக்க நாடுகளின் தேசிய கொடிகளை அச்சடித்து ஏற்பாடு செய்துள்ளார்.

சிலையின் பாதுகாப்பிற்காக இரும்பு கூரை அமைத்து, டிரம்ப்பினர் சிலையை அவரைப் போலவே தத்ரூபமாக வடிவமைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார். இரண்டு நாட்டு அதிபர்கள் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்றும் செய்தியை மட்டுமே அறிந்த மக்களுக்கு, பிற நாட்டு அதிபருக்கு சிலை வைத்து வழிபட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது.

இந்திய நாட்டை விட அமெரிக்க அதிபர் மீது அவ்வளவு பற்றா, என்கிற வகையில் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி கேலியையும், கிண்டலையும் உருவாக்கியுள்ளது. மேலும் தெலுங்கானா ஜங்காவ் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version