Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம்

அமெரிக்காவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ட்ரம்பின் மரண கடிகாரம்

உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் இது வரை 13 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 81000 பேர் இறந்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபரான டோனால்ட் ட்ரம்ப் மீது அவர் நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் புதிதாக விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டது. ட்ரம்பின் மரண கடிகாரம் (Trump Death Clock) என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இதில் அமெரிக்காவில் இது வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணைக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதாகையை திரைப்படத் தயாரிப்பாளர் யூஜின் ஜாரெக்கியால் நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அதிபர் ட்ரம்ப் சரியாக செயல்பட்டிருந்தால் அமெரிக்காவில் இவ்வளவு பேரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். ட்ரம்ப் தக்க சமயத்தில் சமூக இடைவெளியையும், பள்ளிகளை மார்ச் 16ம் தேதிக்கு பதிலாக ஒரு வாரத்திற்கு முன்னர் 9ம் தேதியே நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த இறப்புகளில் 60% வரை குறைந்திருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இவரின் இந்த செயலுக்கு அமெரிக்கர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version