russia: அடுத்த வருடம் ஜனவரியில் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து என புதின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். மேலும் அவர் வருகிற ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள நிலையில் அவர் தனது அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அவரின் வெற்றிக்கு பாராட்டியுள்ளார். மேலும் அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அவர் கூறிய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெற்றி பெற்ற பின் அவரை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
டிரம்ப் ஒரு சிறந்த அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவார்ந்த அரசியல்வாதி என கூறியுள்ளார். மேலும் அவர் மீது பல கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன,அதனால் அவர் உயிருக்கு ஆபத்து அதிகமாக உள்ளது. இதனால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடும் போது பென்சில்வேனியாவில் ஒரு சிறு வயது இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்ய முயன்றார். அதிர்ஷ்ட வசமாக அந்த சம்பவத்தில் அந்த குண்டு அவரின் காதில் உரசி சென்றது. அதனால் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.அதனை தொடர்ந்து டிரம்ப் கோல்ஃப் விளையாடும் போது ஒருவர் கொலை ஆயுதங்களுடன் நெருங்கினார்.
இதுபோன்ற சம்பவங்களால் அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறியுள்ளார். மேலும் அதை தொடர்ந்து நடந்து வரும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் உதவுவார் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.