Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாக்குகளை கவர புது வியூகம் தீட்டும் டிரம்ப் குழுவினர்

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் உயிரிழப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலேயே பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் மிக அதிக சோதனைகளைச் செய்து வருகிறது என கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 6 முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன்படி தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதாக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக டிரம்பின் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவை மீண்டும் வலிமையான பொருளாதார சக்தியாக மாற்றுவது, டிரம்ப் கறுப்பினத்தவருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உடைப்பது, சட்டம் ஒழுங்கை கட்டிக் காத்தது என்ற பிரச்சாரங்களை முன்னெடுக்க குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனை கடுமையாக தாக்குவது, யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யாமல் இருப்பவர்களின் வாக்குகளை கவருவது என வியூகம் வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது என டிரம்ப் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version