அமெரிக்காவில் கடந்த 2017ஆம் வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார். இதற்கு அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது, மிகப்பெரிய ஜனநாயக மற்றும் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு நிர்வாகத் திறமை மிக்க நபரிடம் செல்ல வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் நோக்கமாக இருக்கிறது. என்று பலரும் தெரிவித்து வந்தார்கள்.
அத்துடன் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஆட்சி அதிகாரத்தை சரியான முறையில் வழிநடத்துவது ஒரு பெண்ணால் முடியாத காரியம் என்ற காரணத்தால்தான் அவருக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய பதவி ஏற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன் குடும்பத்தை வலுப்படுத்துவதற்காக செலவு செய்ததாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் குற்றம் சுமத்தியது.
இதுகுறித்து வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, ஆனால் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் லாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக சுமார் 7,50,000 அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்குவதாக ட்ரம்பின் பதவியேற்பு குழு அறிவித்திருக்கிறது.
இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்ற வாஷிங்டன் அட்டார்னி ஜெனரல் கார்ல் ரேசின் ட்ரம்ப் தரப்பிடம் இருந்து பெறப்படும் தொகை வாஷிங்டனில் செயல்படும் லாப நோக்கமற்ற இரண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.