கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். தற்போது அது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு காரணம் உள்நாட்டில் எழுந்த நிதி பிரச்சனை மற்றும் மசோதா நிறைவேற்றப்படாதது , உட்கட்சிகளுகுள் எழுந்த பிரச்சனை என காரணங்களால் தற்போதைய பிரதமர் பதவி விலகியுள்ளார்.
இந்த நிலையை பயன்படுத்தி கொள்ள திட்டம் ஒன்றை வகுத்துள்ளார் டொனல்ட் டிரம்ப். அமெரிக்க அதிபராக இந்த மாதம் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இவர் மூன்று முக்கிய நாடு மற்றும் நாடு பகுதிகளை இணைக்க திட்டம் வகுத்துள்ளார். இதன்படி கனடாவை தற்போது அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வாறு அமெரிக்கா உடன் இணைப்பதன் மூலம் கட்டணம் குறைவு மற்றும் வரி தொகை குறைவு, பிற நாட்டு அச்சுறுத்தல் இருக்காது. கனடா டாலர் மதிப்பை அமெரிக்க டாலராக மாற்றி கொள்ளலாம் மருத்துவ முறைகள் மாற்றப்படும். இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு நான் ஆஃபர் தருகிறேன். இதனால் இந்த வாய்ப்பை கனடா பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை அதிபர் ஆனவுடன் கையகபடுத்த படுவதாக கிறிஸ்மஸ் வாழ்த்தில் தெரிவித்திருந்தார் டிரம்ப்.