இதை தினசரி செய்தால் இனி நீங்கள் வாழ்நாள் முழுவதும் BP மாத்திரை சாப்பிட தேவையில்லை!!

0
171
If you do this daily you will no longer need to take BP pills for the rest of your life!!

 

நமது உடலில் உயர இரத்த அழுத்தம் சைலண்டாக நுழைந்து கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.உயர் இரத்த அழுத்தத்தில் லோ பிபி மற்றும் ஹை பிபி என்று இருவகை இருக்கிறது.உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் பெரியளவில் பாதிப்பை சந்திக்கும்.

மோசமான உணவுமுறை பழக்கமே இரத்த அழுத்தம் ஏற்பட முதன்மை காரணமாகும்.உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்,உடல் பருமன்,மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது.சிலருக்கு வயது முதுமை காரணமாகவும்,பரம்பரைத் தன்மை காரணமாகவும் பிபி ஏற்படுகிறது.

பிபி அறிகுறிகள்:

*குமட்டல்
*தலைவலி
*பார்வை குறைபாடு
*மயக்கம்
*நெஞ்சு வலி
*வலிப்பு
*மூச்சு திணறல்

பிபி வராமல் இருக்க செய்ய வேண்டியவை:

1)அதிக உப்பு மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2)உணவுமுறையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.எண்ணையில் பொரித்த,வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

3)உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4)சிவப்பு இறைச்சி,பதப்படுத்தப்பட்ட இறைச்சி,ரெடிமேட் உணவுகள்,பால் பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

5)பொட்டாசியம்,மெக்னீசியம்,கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

6)நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

7)வாழைப்பழம்,ஸ்ட்ராபெர்ரி,தர்பூசணி,மாம்பழம்,மாதுளை உள்ளிட்ட பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

8)தினமும் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி,உடற்பயிற்சி அல்லது தியானம் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.