எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! கள்ளக்குறிச்சி மக்களிடம் மன்றாடும் முதல்வர்!

0
151
Trust us! The Chief Minister pleads with the people of Kallakurichi!

எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! கள்ளக்குறிச்சி மக்களிடம் மன்றாடும் முதல்வர்!

கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் ஒரு மாணவி திடீரென்று இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் இது தற்கொலை என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தற்கொலைக்கான எந்த ஒரு காரணமும் இல்லாததால் இது கொலை தான் என்று மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள ரத்த கறைகளும் மாணவியின் மேல் உள்ள கீறல்களும் இது கொலை என கூற ஓர் ஆதாரமாக இருந்தது.

இருப்பினும் பள்ளி நிர்வாகமோ மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்று கூறினர். இரு நாட்களுக்குள் மாணவியி மர்மமாக இறந்ததை  குறித்து பல செய்திகள் மக்களிடையே பரவியது. அதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் பள்ளியை மூடும்படி முற்றுகையிட்டனர். அதுமட்டுமின்றி இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இருப்பதால் மக்கள் அப்பள்ளியின் பேருந்துக்கு தீ வைத்து எரித்துள்ளனர். மாணவி இறந்ததையடுத்து எந்த ஒரு விசாரணையும் தீவிரமாக எடுக்காததால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

அதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போராட்ட களமாக வெடிக்க தொடங்கியுள்ளது. மாணவிக்கு நீதி கேட்டு இன்று மறியல் போரட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தடுக்க சென்ற போலீசார் மீதும் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்த போலீசார் வாகனத்திற்கும் தீ வைத்தனர். மேலும் அந்தப் பள்ளியை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

அது மட்டுமின்றி இந்த போராட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்த நேரிட்டது. இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், தற்பொழுது கள்ளக்குறிச்சியில் உள்ள சூழல் தனக்கு வருத்தம் அளிக்கிறது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் குற்றவாளிகள் யாராக இருப்பினும் கட்டாயம் தண்டனை வழங்கப்படும். அதுமட்டுமின்றி உள்துறை செயலாளரையும் காவல்துறை தலைமை இயக்குனரையும் கள்ளக்குறிச்சிக்கு செல்ல உத்தரவிட்டு உள்ளேன். ஆகையால் அரசின் நடவடிக்கை மேல் நம்பிக்கை வையுங்கள். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.