மூன்று கண்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் வைரல் வீடியோ உண்மையா:? ஆய்வு தகவல்?

0
170

தற்போது உள்ள காலகட்டத்தில் சற்று வித்தியாசமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடப்பட்டால் அதன் உண்மைத்தன்மை என்னவென்று அறியாமல் அது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாக படுகிறது.

இதுபோன்றுதான் சில நாட்களுக்கு முன்பு மூன்று கண்களை உடைய குழந்தைபிறந்துள்ளது என்ற ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது இதன் உண்மைத்தன்மை தெரியாமலும் பல பேரால் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகின்றன.ஆனால் தற்போது இந்த வீடியோவின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

இது குறித்து ஒரு பிரபல ஆங்கில ஊடகம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், இது உண்மையில்லை, வீடியோ எடிட்டிங் என்று குறிப்பிட்டுள்ளது. அது எவ்வாறு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது என்பதையும் விளக்கியுள்ளது. அதில் அந்த குழந்தையின் வலது கண்ணும், நெற்றிக் கண்ணும் ஒரே மாதிரியான அசைவுகளை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்து..

மூன்றாவது கண்ணோடு குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது இது டிப்ரோசோபஸ் என்று அழைக்கப்படும் ஒரு அரிய பிறவி கோளாறின் ஒரு பகுதியாக நிகழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குழந்தை அவ்வாறு பிறக்க வில்லை. இது எடிட்டிங் என்று குறிப்பிட்டுள்ளது.