Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரவை உப்புமா ஒட்டாமல் உதிரி உதிரியாக வர இனி இதுபோல செய்து பாருங்கள்!!

#image_title

ரவை உப்புமா ஒட்டாமல் உதிரி உதிரியாக வர இனி இதுபோல செய்து பாருங்கள்!!

நம் அனைவரின் வீடுகளில் அடிக்கடி செய்யக்கூடிய உணவு உப்புமா.இதனாலே பலரும் இதை வெறுக்கும் நிலைக்கு ஆளாகி இருப்போம்.இந்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறை படி செய்தால் எத்தனை முறை வேண்டுமாலும் சாப்பிட தூண்டும்.அந்தளவிற்கு உதிரியாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

நெய் – 1 ஸ்பூன்

பச்சை வேர்க்கடலை – 1 தேக்கரண்டி

முந்திரி – 10

ரவை – 1 கப்

தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – 1 துண்டு

பெரிய வெங்காயம் – 1/2(நறுக்கியது )

கருவேப்பிலை -1 கொத்து

காய்ந்த மிளகாய் – 1

தக்காளி – 1 தேக்கரண்டி(நறுக்கியது)

தூள் உப்பு – தேவையான அளவு

தேங்காய் – 1தேக்கரண்டி(துருவியது)

செய்முறை:-

1.அடுப்பு பற்ற வைத்து கடாய் வைத்து நெய் சேர்த்து சூடானதும் அதில் வேர்க்கடலை போட்டு வறுக்க வேண்டும்.பின்னர் அதனை ஒரு தட்டிற்கு மாற்றிய பிறகு அடுத்து முந்திரி பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.அதையும் வேர்க்கடலை வைத்துள்ள தட்டிற்கு மாற்றி கொள்ள வேண்டும்.பிறகு ரவையை கொட்டி மிதமான தீயில் குறைந்தது 3 அல்லது 5 நிமிடங்கள் வரை வறுக்க வேண்டும்.

2.மீண்டும் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு மற்றும் கடலை பருப்பு பொரிந்து வந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

3.அடுத்து இஞ்சி,நறுக்கிய பெரிய வெங்காயம்,காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

4.பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

5.பின்னர் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து மிதமான தீயில் கை விடாமல் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கிளறவும்.

6.அதில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை,முந்திரி மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

Exit mobile version