Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த க்ரீமை  வீட்டில் செய்து பாருங்கள்!!மூக்கின் மேல் இருக்கும் கருப்பு புள்ளிகள் நீங்கும்!! 

இந்த க்ரீமை  வீட்டில் செய்து பாருங்கள்!! மூக்கின் மேல் இருக்கும் கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கும்!!

தற்போது பெரும்பாலும் பல கிரீம்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் அதிகம் பயன்படுத்துவதால் முகத்தின் அழகு பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு காரணம் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதே ஆகும். மேலும் பெண்களுக்கு இயற்கையாக மூக்கின் மேல் வெள்ளை புள்ளிகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். அதனை நீக்குவதற்கு பெண்கள் பல கிரீம்களை வாங்கி பூசி வருகின்றார்கள். இதனால் பின் விளைவு அதிக அளவு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், அவ்விடத்தில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அப்படியே தங்கி, சருமத் துளைகளை அடைத்து, நாளடைவில் அவ்விடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் புள்ளிகளாக மாறும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக மறைக்க முடியும்.

தேவைப்படும் பொருட்கள் சுடுதண்ணீர்

அரிசி மாவு

பால்

தக்காளி ஜூஸ்

கற்றாழை

உருளைக்கிழங்கு சாறு

செய்முறை

முதலில் சுடு தண்ணீரை எடுத்துக்கொண்டு முகத்திற்கு நல்ல மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அரிசி மாவு, பால் தக்காளி ஜூஸ், கற்றாழை மற்றும் உருளைக்கிழங்கு சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அந்தக் கலவையை வெள்ளைப் புள்ளிகள் இருக்கும் இடத்தில்   பூசி விட வேண்டும். மேலும் அதனை 15 நிமிடங்கள் கழித்த பின் சாதாரண தண்ணீரில் கழுவி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் மூக்கின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் உன் கருப்பு புள்ளிகள் உடனடியாக நீங்குகிறது. இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனை உடனடியாக தரும். மேலும் இது மூக்கிற்கு மட்டுமல்லாமல் முகத்திற்கும் நல்ல பொலிவை தருகிறது.

Exit mobile version