Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல் உப்பை இந்த மூன்று இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து உடனே விடுதலை!

கல் உப்பை இந்த மூன்று இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து உடனே விடுதலை!

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவருமே அதிக அளவு பாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது கடன் பிரச்சனை. அவ்வாறு பாதிக்கப்படும் கடன் பிரச்சனையில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்றும் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம்.

கல்லுப்பு என்பது மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகின்றது. கல் உப்பை எப்பொழுதும் வைக்கும் பொழுது கண்ணாடி பாத்திரம் அல்லது பீங்கான் ஜாடி மற்றும் மண் பாண்டங்களில் மட்டுமே வைக்க வேண்டும். ஒரு கண்ணாடி கப் அல்லது மண் பாண்டத்தையோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் கல் உப்பை முழுமையாக நிரப்பி கொள்ள வேண்டும். அது சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்குமம் வைக்க வேண்டும். இதனை ஒரு வாரம் மட்டுமே பூஜை அறையில் வைக்க வேண்டும் அதன் பிறகு அதனை செடியிலோ அல்லது தண்ணீரிலோ கரைத்து விடலாம்.

அதன் பிறகு இரண்டாவதாக இது போலவே கல் உப்பை ஒரு பாத்திரத்தில் நிரப்பி கொள்ள வேண்டும் உங்களின் குளியல் அறையில் வைக்க வேண்டும். நாம் இவ்வாறு உப்பை வைக்கும் பொழுது நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். எப்பொழுதும் நீங்கள் குளிக்கும் பொழுது அதில் சிறிது கல் உப்பு சேர்த்து குளித்து வர உடல்நலம் மேம்படும் மற்றும் நமக்கு இருக்கும் கண் திருஷ்டியும் கரைந்து போகும் என்று கூறப்படுகிறது.

மூன்றாவதாக நாம் வைக்கும் கல் உப்பு இடம் வடகிழக்கு மூலை அங்கு கண்ணாடி பாத்திரம் அல்லது மண் பாத்திரத்தில் மட்டுமே கல் உப்பை பயன்படுத்த வேண்டும் முதலில் கல் உப்பு சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும் அதில் சிறிதளவு மஞ்சள் சேர்க்க வேண்டும் அதனை வடகிழக்கு மூலையில் உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

ஒரு வாரத்திற்கு மட்டுமே இதனை வைக்க வேண்டும் அதன் பிறகு அதனை செடியில் ஊத்தி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ,கண் திருஷ்டி போன்றவை ஏற்படாது மேலும் கடன் பிரச்சனைகளில் இருந்து உடனே நாம் விடுபடலாம்.

Exit mobile version