கை மற்றும் கால் நகங்களில் காணப்படும் மஞ்சள் நிறம் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சை சாறு
2)சோடா உப்பு
பயன்படுத்தும் முறை:
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்கு கலக்க வேண்டும்.
இந்த பேஸ்டை நகங்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு நன்றாக உலரவிட்டு பிறகு வெது வெதுப்பான நீரில் நகத்தை சுத்தம் செய்யவும்.இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் நகங்களில் காணப்படும் மஞ்சள் நிறம் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)டூத் பேஸ்ட்
பயன்படுத்தும் முறை:
பல் துலக்கி பயன்படுத்தும் டூத் பேஸ்டை விரல் நகங்களுக்கு அப்ளை செய்து பிரஸ் கொண்டு நகங்களை தேய்க்கவும்.10 நிமிடங்களுக்கு விரல்களை தேய்த்து பிறகு வெது வெதுப்பான நீரில் நகங்களை கழுவினால் மஞ்சள் நிறம் நீங்கி வெண்மையாகும்.
தேவையான பொருட்கள்:
1)கல் உப்பு
2)லெமன் சாறு
பயன்படுத்தும் முறை:
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இதை நகங்கள் மீது அப்ளை செய்து எலுமிச்சை தோல் கொண்டு நகத்தை தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் நகத்தில் உள்ள மஞ்சள் நிறம் நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)ஆரஞ்சு தோல்
பயன்படுத்தும் முறை:
ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ள வேண்டும்.இந்த பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து விரல் நகங்களில் பூசி நன்கு தேய்க்கவும்.இவ்வாறு செய்த பின்னர் தண்ணீர் கொண்டு நகங்களை சுத்தம் செய்தால் மஞ்சள் நிறம் நீங்கிவிடும்.