உங்கள் ட்ரை ஸ்கின்னை பால் போன்று வெண்மையாக்க இந்த நேச்சுரல் டிப்ஸை ட்ரை பண்ணுங்கள்!!
உங்கள் சருமம் வறண்டு போனால் அவை எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.வறண்ட சருமம் உங்களுக்கு வயதான தோற்றத்தை கொடுத்து சங்கடத்தை ஏற்படுத்தும்.முகத்தில் ஈரப்பதம் குறைந்தால் அவை சருமத்தை வறண்டு போகச் செய்து விடும்.
உங்கள் வறண்ட சருமத்தை மென்மையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்.
சூரியகாந்தி ஆயில்
10 கிராம் சூரியகாந்தி விதையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதை 2 தேக்கரண்டி காய்ச்சாத பாலில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்வதினால் முக வறட்சி நீங்கி மென்மையாகும்.
தேங்காய் எண்ணெய்
கற்றாழை ஜெல்
ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை சிறிது தேங்காய் எண்ணையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.இவ்வாறு செய்வதினால் முக வறட்சி நீங்கி மென்மையாகும்.
ஓட்ஸ்
ஆலிவ் ஆயில்
ஒரு தேக்கரண்டி ஓட்ஸை பொடித்து 25 மில்லி ஆலிவ் ஆயிலில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகம் முழுவதும் அப்ளை செய்து வந்தால் சரும வறட்சி நீங்கி முகம் மென்மையாகும்.
வாசலின்
முகம் முழுவதும் பெட்ரோலியம் ஜெல் அப்ளை செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகும்.
பசும் பால்
தினமும் இரவு காய்ச்சாத பசும் பாலை முகத்திற்கு அப்ளை செய்து மறுநாள் காலையில் முகத்தை கழுவி வந்தால் முகம் மிருதுவாக மாறும்.
தேங்காய் எண்ணெய்
வைட்டமின் ஈ மாத்திரை
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை போட்டு நன்கு மிக்ஸ் செய்து முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.