கூன் விழுந்த முதுகை நேராக நிமிர்த்த செய்ய இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!!
நீண்ட நேரம் குனிந்த படி வேலை செய்வது,ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வது,வயது முதுமை,எலும்பு வலி,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் முதுகு கூன் வளைந்து விடுகிறது.
குறிப்பாக கழுத்து பகுதியில் எலும்புகள் பழுதாவதால் முதுகு கூன் விழுகிறது.முதுகு எலும்பு தேய்மானமடைந்தால் நாளடைவில் கூன் விழும் பாதிப்பு ஏற்படுகிறது.இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் மட்டுமல்ல இளம் தலைமுறையினரும் கூன் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.
கூன் விழுந்த முதுகை சரி செய்வது எப்படி?
தினமும் காலையில் எழுந்ததும் 15 நிமிடங்கள் நிமிர்ந்து உட்காருங்கள்.முதுகு தண்டு வளையாமல் நிமிர்ந்தபடி உட்கார வேண்டும்.
சில உடற் பயிற்சிகள் வளைந்த முதுகு தண்டை நேராக்க உதவுகிறது.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் இருந்தால் தவிர்ப்பது நல்லது.உடலை குறுக்கியபடி உறங்குவது,அமர்ப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.நடக்கும் பொழுது முதுகை வளைக்காமல் நேராக நிமிர்ந்தபடி நடக்க வேண்டும்.
முதுகெலும்பு வலிமை பெற கால்சியம் நிறைந்த பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்தி வர வேண்டும்.
தினமும் காலையில் 30 நிமிடங்கள் யோகா செய்து வந்தால் கூன் விழுதல் ஏற்படாது.கணினியில் வேலை பார்ப்பவர்கள் அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதனால் கூன் விழுவது தடுக்கப்படுவதோடு கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.