மோசமான வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த இரண்டு ட்ரிங்க்ஸ் செய்து சாப்பிடுங்கள்!!
கோடை வெப்பத்தால் உடலில் உள்ள நீர் வியர்வை மூலம் வெளியேறி விடுகிறது.இந்த நீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவதன் மூலம் வெயில் கால நோயில் இருந்து தப்பிவிட முடியும்.
நுங்கு,இளநீர்,வெள்ளரி பழம்,முலாம் பழம் ஆகியவை உடலை குளிர்ச்சி தரும் பொருட்கள் என்பது அறிந்த ஒன்று.அதேபோல் சில ஆரோக்கியமாக பானங்கள் மூலமும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
ஷிகஞ்சி:
இவை டெல்லியின் பிரபல குளிர்பான ஆகும்.இதை எவ்வாறு தயாரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு
2)பிளாக் சால்ட்
3)சர்க்கரை
4)சீரகப் பொடி
5)புதினா இலை
6)ஆம்சூர் பொடி
செய்முறை:-
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.எதை அரை கப் நீரில் கலக்கவும்.பிறகு அதில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் பிளாக் சால்ட் சேர்க்கவும்.
பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகப் பொடி,5 புதினா இலை மற்றும் 1/2 தேக்கரண்டி ஆம்சூர் பொடி சேர்த்து கலக்கி கொள்ளவும்.அதன் பின்னர் சிறிது ஐஸ்கட்டி சேர்த்தால் சுவையான ஷிகஞ்சி தயார்.இந்த பானம் கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
சட்டு கா சர்ப்த்:
இது பீகாரின் பிரபல குளிர் பானம் ஆகும்.இதை எவ்வாறு தயாரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பொரித்த கடலை பருப்பு மாவு
2)சர்க்கரை
3)பிளாக் சால்ட்
4)சீரகப் பொடி
5)ஐஸ் வாட்டர்
6)எலுமிச்சை சாறு
7)புதினா இலைகள்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் பொரித்த கடலை பருப்பு மாவு 2 தேக்கரண்டி மற்றும் சர்க்கரை 5 தேகர்ந்து சேர்த்து கலந்து விடவும்.பிறகு அரை தேக்கரண்டி பிளாக் சால்ட்,1/4 தேக்கரண்டி சீரகப் பொடி மற்றும் தேவையான அளவு வாட்டர் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு பாதி எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் 5 புதினா இலைகளை போட்டு கலக்கினால் சுவையான மற்றும் உடலுக்கு குளிரிச்சி தரும் சட்டு கா சர்ப்த் தயார்.