அசுர வேகத்தில் முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..!
உடல் சூடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் முடி உதிர்வு பாதிப்பு பலருக்கு ஏற்படுகிறது.
இவ்வாறு இழந்த முடியை மளமளவென வளர வைக்க மூலிகை பேஸ்ட் பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)ஆவாரம் பூ
2)வெந்தயம்
3)பயத்தம் பருப்பு
செய்முறை….
1)ஒரு கைப்பிடி அளவு அவராம் பூவை காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
2)பிறகு 50 கிராம் வெந்தயம் மற்றும் 250 கிராம் பயத்தம் பருப்பு வாங்கிக் கொள்ளவும்.
3)இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி மூடி வைக்கவும்.
பயன்படுத்தும் முறை…
தங்கள் தலைமுடிகளுக்கு ஏற்றவாறு தயார் செய்து வைத்துள்ள பொடியை எடுத்துக் கொள்ளவும்.
இதில் சிறிது தண்ணீர் ஊற்றி குழைத்து தலை முடிகளுக்கு தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம்
2)கருஞ்சீரகம்
3)செம்பருத்தி இதழ்
செய்முறை….
இருபது செம்பருத்தி பூவின் இதழ்களை எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 2 ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூளாக்கி கொள்ளவும். அடுத்து அதில் செம்பருத்தி இதழ்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ்டை தலைக்கு தடவி குளித்து வந்தால் முடி அசுர வளர்ச்சி அடையும்.