பல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
நம்மில் பலருக்கு ஒருசில சமயம் இரவு தூக்கத்திற்கு பிறகு எழுந்து பார்த்தால் உதடு அருகே புண்கள் ஏற்பட்டு இருக்கும். இது பல்லி எச்சத்தால் தான் ஏற்படுகிறது என்று பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் இவை உண்மை கிடையாது. உடலில் சத்து குறைபாடால் இந்த புண்கள் ஏற்படுகிறது.
பல்லி எச்ச புண் என்று சொல்லப்படும் வாய்ப்புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பார்க்கவும்.
தீர்வு 01:-
தேவையான பொருட்கள்:-
*வெற்றிலை
*பூண்டு பல்
செய்முறை…
2 வெற்றிலை மற்றும் 3 பல் பூண்டை எடுத்து அரைத்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசினால் அவை விரைவில் ஆறும்.
தீர்வு 02:-
தேவையான பொருட்கள்:-
*ஐஸ்கட்டி
செய்முறை…
ஒரு துண்டு ஐஸ்கட்டியை வாயில் புண் உள்ள இடத்தில் வைத்து மஜாஜ் கொடுக்க அவை விரைவில் ஆறும்.
தீர்வு 03:-
தேவையான பொருட்கள்:-
*சோற்று கற்றாழை
செய்முறை…
ஒரு கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். இந்த ஜெல்லை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து உதட்டில் புண் இருக்கும் இடத்தில் பூசினால் அவை விரைவில் ஆறும்.