முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

0
124

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க.

இன்றைக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.பெண்களுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரப்பதனால் தேவையற்ற முடிகள் முகத்தில் வளரும். அது பார்ப்பவர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் .இந்த வீட்டில் இருந்தே செய்யும் இந்த முறையை பயன்படுத்தி உங்களது தேவையற்ற முடிகளை முகத்தில் இருந்து அகற்றி விடலாம்.இது மிகவும் எளிதான ஒன்றாகும் கொரோனா காலகட்டத்தில் இந்த மாதிரியான எளிதான முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

தேவையற்ற முடிகளை நீக்குவதற்கான க்ரீமை தயார் செய்யும் முறை

1. முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் அதில் பார்லி அரிசி மாவு ஒரு ஸ்பூன் போடவும்.

2. அதில் இரண்டு சிட்டிகை படிகாரம் துளை போடவும்.

3. அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போடவும்.

4. கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

5. நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் எங்கெங்கும் முடிகள் உள்ளதோ அங்கு அங்கு பூசி விடவும்.

6. நன்கு காய்ந்த பிறகு அதை எடுத்து விடவும்.

7. குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி விடவும். நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது ஒரு moisturizer க்ரீம்களை போடவும்.

தொடர்ந்து இதை வாரத்திற்கு இரு முறை செய்யும் பொழுது உங்களது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றி உங்கள் முகம் மிகவும் பொலிவு பெறும், மற்றும் அழகாகவும் காணப்படும். இந்த சிறிய முறையானது அனைவரும் பயன் படுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த முறையை பயன்படுத்தி உங்கள் முகத்தை அழகாக மாற்றுங்கள்.