5 நிமிடத்தில் கடுமையான தலைவலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

0
160
Try this home remedy to get rid of severe headache in 5 minutes!!

5 நிமிடத்தில் கடுமையான தலைவலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

பணிச்சுமை,குடும்பத்தில் பிரச்சனை,உடல் நலக் கோளாறு,மன அழுத்தம்,தலையில் ஏதேனும் பிரச்சனை இருத்தல் போன்ற காரணங்களால் அடிக்கடி தலைவலி உண்டாகிறது.

ஒற்றை தலைவலி,பின்பக்க மண்டையில் வலி என்று தலைவலியில் பல வகைகள் இருக்கின்றது.இவ்வாறு உண்டாகும் தலைவலியை எளிய வீட்டுவைத்தியம் மூலம் சில நிமிடங்களில் குணமாக்கிவிட முடியும்.

ஒரு பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து சுவாசித்தல் தலைவலி பறந்துவிடும்.

புதினா இலைகளை உலர்த்தி சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி பாதிப்பு குணமாகும்.

விக்ஸ் வேப்பரப் ஒரு ஸ்பூன் எடுத்து சூடான நீரில் கலந்து ஆவி பிடித்தால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.

இஞ்சியை இடித்து சாற்றை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி முழுமையாக குணமாகும்.

பட்டை,கிராம்பு,கொத்தமல்லி விதை,துளசி ஆகியற்றை கொண்டு மசாலா டீ செய்து பருகினால் தீராத தலைவலிவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகரை சூடான நீரில் கலந்து கொள்ளவும்.பிறகு ஒரு காட்டன் துணியை அதில் நினைத்து நெற்றிக்கு பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.

ரோஸ்மேரி எண்ணெயை நெற்றிக்கு அப்ளை செய்தால் தலைவலி குணமாகும்.அதேபோல் சந்தனத்தை பொடியாக்கி நீரில் குழைத்து நெற்றிக்கு பற்றுப்போட்டால் தீராத தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.