Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளை முடியை ஒரே வாரத்தில் கருமையாக்க இந்த இயற்கை வழியை பின்பற்றி பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

#image_title

வெள்ளை முடியை ஒரே வாரத்தில் கருமையாக்க இந்த இயற்கை வழியை பின்பற்றி பாருங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

முன்பெல்லாம் 45 வயதை கடந்தால் தான் வெள்ளை நரை தென்பட ஆரமிக்கும்.ஆனால் இன்றைய வாழக்கை முறையில் சிறுவர்கள்,இளம் வயதினர் என்று அனைவருக்கும் வெள்ளை நரை பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டது.

இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணம் என்று சொல்லப்படுகிறது.இதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்தினால் முடி உதிர்வு,அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் தான் வரும்.இதனால் இயற்கை வழியில் தீர்வு காண்பது சிறந்தது.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*பாதாம் பருப்பு எண்ணெய் – 6 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 6 தேக்கரண்டி பாதம் எண்ணெயை எடுத்து அதில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.முடி வளர்ச்சிக்கான எண்ணெய் தயார்.

இதை தலை முடிகளின் வேர்காள் பகுதிகளில் ஊற்றி நன்கு மஜாஜ் செய்யவும்.பிறகு 30 நிமிடங்கள் அதை தலையில் இருக்கும் படி ஊற விடவும்.

பிறகு சுத்தமான தண்ணீரில் முடியை அலசிக் கொள்ளவும்.இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

சீகைக்காய்,பூந்தி கொட்டை தூள் போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு கூந்தலை அலசிக் கொள்ளவும்.இந்த முறையை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வந்தாலே இளநரை,முடி உதிர்வு பாதிப்பு நீங்கி பாதிப்பு நீங்கும்.

மற்றொரு எளிய தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*செம்பருத்தி தூள் – 1/2 தேக்கரண்டி

*கருப்பு எள் – 3 தேக்கரண்டி

*கரிசலாங்கண்ணி தூள் – 1 தேக்கரண்டி

*பெரு நெல்லிக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 250 மில்லி

செய்முறை:-

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் எண்ணெய் சூடானதும் அதில் 1 தேக்கரண்டி கரிசலாங்கண்ணி தூள்,1/2 தேக்கரண்டி பெரு நெல்லிக்காய் தூள்,1/2 தேக்கரண்டி செம்பருத்தி தூள் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் இதை 2 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அடுத்து அதில் 3 தேக்கரண்டி கருப்பு எள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.பிறகு அடுப்பை அணைத்து இந்த எண்ணெயை 2 நாட்கள் வரை நன்கு ஆற விடவும்.

பிறகு இதை ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும்.இவ்வாறு செய்யும் பொழுது 6 மாதங்கள் வரை இந்த எண்ணெயை உபயோகிக்க முடியும்.

இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தோம் என்றால் இளநரை அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.

Exit mobile version