Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலிக்கு இந்த எண்ணெயை செய்து தடவி பாருங்கள்!! பிறகு வலி பறந்தே போய்விடும்!!

மூட்டு வலிக்கு இந்த எண்ணெயை செய்து தடவி பாருங்கள்!! பிறகு வலி பறந்தே போய்விடும்!!

மூட்டுவலி என்பது எலும்புகள் இணையுமிடத்தில் உண்டாகும் வலி. விரல்களை மடக்க முடியாதது,மற்றும் கை கால்கலை நீட்டமுடியாதது இதன் அறிகுறிகள் ஆகும். மற்ற அறிகுறிகள் மூட்டுக்கள் சிவத்தல்,வீக்கம். போன்றவை. மேலும் இந்த நோயால் மேலும் சில உறுப்புக்களும் பாதிக்கப்படலாம்.இது நாள்பட்ட வலியாகவோ உடனடி வலியாகவோ இருக்கலாம்.மூட்டு வலியின் அறிகுறிகள்:

மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்:

முழங்கால் மூட்டுவலி என்பது முழங்கால் மூட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பு குருத்தெலும்புகளை இழப்பதன் விளைவாகும். முழங்கால் மூட்டுவலிக்கான காரணங்கள் பின்வருமாறு:

எனவே இந்த மூட்டு வலியை சரி செய்வதற்கான ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பு இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து பொடி(1 ஸ்பூன்)
சுக்கு பொடி(அ) சுக்கு(1/2 ஸ்பூன்)
கொடிவேலி பொடி(அ) கொடிவேலி வேர்(1/2 ஸ்பூன்)
ஓமம் ( 1 ஸ்பூன்)
பெருங்காயம்(1/4 ஸ்பூன்)
நல்லெண்ணெய்(50ml)

செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 50ml நல்லெண்ணையை எடுத்துக் கொள்ளவும். என்னை சூடான உடன் அதில் ஒரு ஸ்பூன் ஓமம், கருப்பு உளுந்து பொடி சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

(ஒருவேளை உங்களிடம் கொடிவேலி வேர் மற்றும் சுக்கு இருந்தால் அதை இப்பொழுதே சேர்த்துக் கொள்ளவும் அல்லது பொடியாக இருந்தால் ஓமம் பொறிந்த பின்னரே சேர்த்துக் கொள்ள வேண்டும்)

ஓமம் நன்கு பொரிந்த பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு சுக்கு பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்திருக்கக்கூடிய கொடிவேலி பொடியை சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக பெருங்காயம் சேர்த்து வடிகட்டி ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதில் கலந்து இருக்கக்கூடிய உளுந்து வைட்டமின்கள் தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் இது மூட்டு வலியை உடனடியாக சரி செய்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் போன்றவை எலும்பை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இந்த எண்ணெயை மூட்டுகளில் தடவி வர மூட்டு வலி உடனடியாக குணமடையும்.

Exit mobile version