Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகத்தில் சுருக்கமே இல்லாமல் இளமையா இருக்கணுமா? இந்த எண்ணெய் போதும்! அதை எப்படி யூஸ் பண்றதுன்னு பாருங்க!

முகத்தில் சுருக்கமே இல்லாமல் இளமையா இருக்கணுமா? இந்த எண்ணெய் போதும்! அதை எப்படி யூஸ் பண்றதுன்னு பாருங்க!

பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள்,பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி முகத்தில் எந்த ஒரு பருக்கள் கரும்புள்ளிகள் இல்லாமல் இயற்கையாக அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

எவ்வளவுதான் பியூட்டி பார்லருக்கு போய் சென்று ஃபேஷியல் செய்தாலும், முகம் ஓரிரு வாரம் மட்டுமே அழகாக இருக்கும். இயற்கை முறையை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் பொழுது இயற்கையாகவே உங்களுக்கு முகப்பொலிவை தரும். இப்பொழுது அந்த மாதிரியான இயற்கை முறையை தான் பார்க்க போகிறோம். கட்டாயம் இதைப் பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கொடுக்கும்.

இளமையை பாதுகாக்க ஆமணக்கு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தேவையான பொருட்கள்:

1. ஆமணக்கு எண்ணெய்

2. கற்றாழை ஜெல்

செய்முறை:

1. ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளவும்.

3. இந்த கற்றாழை ஜெல்லில் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணையை ஊற்றவும்.

4. இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

5. இதை எடுத்து முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

6. 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளவும்.

7. இதை நீங்கள் கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

8. தொடர்ந்து இதனை செய்து வரும் பொழுது உங்களது முகம் சுருக்கம் எதுவுமின்றி இளமையுடன் காணப்படுவீர்கள்.

Exit mobile version