உடல் உஷ்ணம் நீங்க வாரம் ஒருமுறை இதை ட்ரை பண்ணுங்க!
தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டது. பொதுவாக கோடை காலம் என்றால் உடல் சூடு, வியர்வை கொப்பளம், அரிப்பு, எரிச்சல், உடல் சோர்வு ஏற்படுவது சாதாரண ஒன்று தான். இவ்வாறு உடல் சூட்டால் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கி கொள்ள குளிர்ச்சி நிறைந்த பானம் ஒன்றை தயாரித்து குடிங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)நுங்கு
2)நன்னாரி சர்பத்
3)சப்ஜா விதை
4)ஹனி
5)ஐஸ் கட்டி
6)இளநீர் வழுக்கை
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் சப்ஜா விதை ஒரு தேக்கரண்டி அளவு போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பிறகு ஒரு கிண்ணத்தில் தங்களுக்கு தேவையான அளவு நுங்கு போட்டு ஒரு தேக்கரண்டி ஹனி ஊற்றி கலக்கவும்.
அடுத்து இளநீர் வழுக்கை சிறிது, நன்னாரி சர்பத் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும். அதன் பின்னர் ஊறவைத்துள்ள சப்ஜா விதை மற்றும் ஐஸ்கட்டி சேர்த்து கலக்கி குடிக்கவும். இந்த பானம் உடலில் உள்ள சூட்டை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.