நீண்ட நாள் குடலில் அடைபட்டு கிடந்த மலம் முழுவதும் வெளியேற ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!
உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றி விட வேண்டும். ஒருவேளை அவற்றை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால் அவை மலச்சிக்கல் பாதிப்பாக மாறிவிடும்.
எனவே குடலில் தேங்கி கெட்டிபடிந்த மலத்தை இலக வைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை முயற்ச்சி பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
காலை நேரத்தில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் வெந்தயப்பொடி சேர்த்து அருந்தலாம்.
1 கிளாஸ் சுடுநீரில் 4 அல்லது 5 துளி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்தலாம்.
தினமும் காலை நேரத்தில் 10 உலர் திராட்சை சாப்பிட்டு வரலாம்.
1 கிளாஸ் சுடுநீரில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அருந்தலாம்.
சீரகத்தை வறுத்து பொடியாக்கி கொதிக்க வைத்து அருந்தலாம்.
காலை நேரத்தில் கீரை வைகளை உணவாக எடுத்து வருவது மூலம் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வாரத்தில் 2 முறை அகத்தி ஜூஸ் அருந்தி வரலாம்.
காலை நேரத்தில் 1 பல் பச்சை பூண்டு சாப்பிட்டு வரலாம்.