Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கால் வலியால் துடிக்கிறீங்களா? இது தடவுங்க ஒரு சில நொடிகளில் கால் வலி சரியாகிவிடும்!

காலையில் எழுந்தவுடன் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு கால்வலி நம்மை பாடாய் படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை அது மூட்டு வலிதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூட்டு வலி வந்து விடுகின்றது. அதற்கு காரணம் நம் உணவு முறைகளும் மற்றும் பழக்க வழக்கங்களும் மட்டும்தான். நாகரீகத்திற்கு ஏற்ற வாறு நம்மை நாம் மாற்றிக் கொள்வது தான் இந்த மாதிரியான நோய்கள் இளம் வயதிலேயே அனைவருக்கும் வந்துவிடுகின்றன.

 

தேவையான பொருட்கள்:

1. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

2. விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன்

3. எலுமிச்சை பழ சாறு அரை டீஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணையை ஊற்றவும்.

3. பின் இரண்டு ஸ்பூன் அளவிற்கு விளக்கு எண்ணெயை ஊற்றவும்.

4. எலுமிச்சை பழ சாறு அரை டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்பொழுது இந்த கலவையை எங்கு கால் வலி உங்களுக்கு அதிகமாக இருக்கின்றதோ அங்கு பூசி நன்றாக மசாஜ் செய்யவும்.

மசாஜ் செய்யும் பொழுது எண்ணெய் உள்ளிழுத்து ஒரு சில நிமிடங்களிலேயே உங்களது கால் வலி குறைவதை நீங்கள் காணலாம்.

இதை நீங்கள் இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து இருக்கலாம். இல்லை இரவு முழுவதும் வைத்து விட்டு காலையில் குளித்து விடலாம்.

தொடர்ந்து மூன்று நாட்கள் இதை செய்து வர உங்களது கால் வலி குறைந்து கால் வலி மறைந்து போவதை உங்களால் உணர முடியும்.

Exit mobile version