Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

#image_title

கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி நீங்கி குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது.

அந்த வகையில் கண் திருஷ்டி நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த கண் திருஷ்டி பரிகாரத்தை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும்.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:-

**6 வெள்ளை நிற பேப்பர்

**1 கைப்பிடி அளவு கல் உப்பு

**காம்புடன் கூடிய 3 காய்ந்த மிளகாய்

**1 தேக்கரண்டி கடுகு

**1 தேக்கரண்டி மிளகு

**7 சூடம்

பரிகாரம் செய்யும் முறை…

இவை அனைத்தையும் கையில் நன்றாக சுருட்டி வைத்துக் கொண்டு திருஷ்டி சுத்த வேண்டும். இவ்வாறு திருஷ்டி சுத்தும் நபர் வீட்டில் இருக்கும் பெண் குறிப்பாக வயது முதிர்ந்த பெண்களாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் நபர்களை கிழக்கு பார்த்தவாறு நிற்க வைத்து அவர்களின் தலையை வலதிலிருந்து இடமாக மூன்று முறையும் இடத்திலிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி சுத்த வேண்டும்.

பிறகு அவர்களுடைய தலையில் இந்த பொட்டணத்தை வைத்து அப்படியே தலையில் இருந்து பாதம் வரை மற்றும் பாதத்திலிருந்து எடுத்து வந்து தலைக்கு கொண்டு வர வேண்டும். இப்படி மூன்று முறை செய்துவிட்டு அவர்களை மூன்று முறை அந்த பொட்டணத்தில் துப்ப சொல்லி வீட்டு வாசலுக்கு முன் வைத்து எரித்து விட வேண்டும்.

இவ்வாறு செய்தப் பின் திரும்ப வீட்டிற்குள் வரும் பொழுது முகம், கை, கால்களை கழுவியப் பிறகு தான் வரவேண்டும். இவ்வாறு வீட்டில் இருக்கும் நபர்களுக்கு சுற்றி போடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

Exit mobile version