Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாக இந்த எளிய வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

#image_title

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாக இந்த எளிய வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

மூல நோய் அதாவது பைல்ஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நோய் பாதிப்பு ஆகும். இவை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக மூலம் என்றால் அதில் வெளி மூலம், உள் மூலம், இரத்த மூலம் என்று வகை வகையாக உள்ளது. இந்த மூல நோய் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் ஆசன வாயில் வீக்கம் ஏற்படும். அடுத்து மலம் கழிக்கும் பொழுது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். ஒருசிலருக்கு அடர் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும்.

மூல பாதிப்பை சரி செய்வது எப்படி?

மருதாணி இலை சிறிதளவு எடுத்து அரைத்து மஞ்சள் கலந்து ஆசனவாயில் தடவி வருவதினால் மூல நோய் பாதிப்பு சரியாகும்.

பெருஞ்சீரகம்(சோம்பு) மற்றும் மிளகு சம அளவு எடுத்து பொடி செய்து கசாயம் செய்து சாப்பிட்டு வர மூல நோய் பாதிப்பு குணமாகும்.

துத்தி கீரையை கடையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் சரியாகும்.

துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூல பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி வரலாம்.

அருகம்புல்லை அரைத்து சாறாக்கி குடித்து வர மூலம் குணமாகும்.

பப்பாளி துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Exit mobile version