கொர் கொர் குறட்டையை அசால்ட்டாக நிறுத்த இந்த சிம்பிள் ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க!!

0
190
Try this simple idea to stop snoring in an assault!!

குறட்டை என்பது உறக்கத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாகும்.இது குறட்டை விடுபவர்களை மட்டுமின்றி அருகில் இருபவரின் தூக்கத்தை கெடுக்கும் ஒரு நிகழ்வாகும்.நீங்கள் தூக்க நிலையில் இருக்கும் போது சுவாசிக்கும் காற்றால் குறட்டை உண்டாகிறது.

குறட்டை சத்தம் ஒரு கடுமையான எரிச்சலூட்டும் ஒலி.குறட்டை ஒரு பொதுவான பிரச்சனையாக கருதப்பட்டாலும் இது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறட்டை ஏற்படக் காரணங்கள்:

1)உடல் பருமன்
2)மூக்கடைப்பு
3)சைனஸ்
4)தொண்டை பிரச்சனை
5)தைராய்டு
6)மது மற்றும் புகைப்பழக்கம்
7)ஒவ்வாமை

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி?

குறட்டையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை
2)கிராம்பு
3)செம்பருத்தி பூ
4)தேன்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு பட்டை,இரண்டு கிராம்பு மற்றும் நான்கு செம்பருத்தி இதழ் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து பருகி வந்தால் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)பெருஞ்சீரகம்
3)கருஞ்சீரகம்

செய்முறை:-

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 1 தேக்கரண்டி சீரகம்,1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.இந்த பொடியை பயன்படுத்தி டீ தயார் செய்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை சரியாகும்.