Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நம்மை படுத்தி எடுக்கும் “முதுகு வலி” குணமாக இதை ட்ரை பண்ணுங்கள்..!!

#image_title

நம்மை படுத்தி எடுக்கும் “முதுகு வலி” குணமாக இதை ட்ரை பண்ணுங்கள்..!!

இன்றைய காலத்தில் ஆண் பெண் என வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு முதுகு வலி. இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும். இந்த முதுகு வலி நாளடைவில் அதிகப் படியான சோர்வு, எடை இழப்பு, மூட்டு எழும்புகளில் வலி, முதுகு தண்டு வடம் பாதித்தால் போன்றவற்றை ஏற்படுத்தும்.

இவை ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல், முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல் போன்றவற்றால் ஏற்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாவிட்டாலும் இந்த முதுகு வலி பிரச்சனை ஏற்படும். இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல இருக்கின்றது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முதுகு வலி முற்றிலும் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*பிரிஞ்சி இலை

*மஞ்சள் தூள்

*பால்

*தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் அதில் 1 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் 1 பிரியாணி இலை கிள்ளி போட்டு கொதிக்க விடவும். பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டிசிறிதளவு தேன் சேர்த்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட முதுகு வலி குணமாகும்.

Exit mobile version