Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

#image_title

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சிலருக்கு சாப்பிட்ட உடன் வாயுத் தொல்லை ஏற்பட்டு விடும். வாயுத் தொல்லை ஏற்பட்டு விட்டால் நிம்மதியே போய்விடும். இதற்கு காரணம் மலச்சிக்கல், உணவு செரிமானம் ஆகாமை, அல்சர் உள்ளிட்ட பிரச்சனைகள் தான். இந்த வாயுத் தொல்லை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை கையில் எடுங்கள்.

தீர்வு 01:

வெள்ளை பூண்டை பசும்பாலில் காய்ச்சி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

தீர்வு 02:

சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை அரைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் உடனடியாக வெளியேறும்.

தீர்வு 03:

சிறிதளவு காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு ஆகியவற்றை நெய்யில் வதக்கி பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 04:

சிறு துண்டு சுக்கை பொடியாக்கி 1 கிளாஸ் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

தீர்வு 05:

ஒரு பல் பூண்டை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் உடனடியாக வெளியேறும்.

தீர்வு 06:

1/4 ஸ்பூன் ஓமம் மற்றும் 1/4 ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தி வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

தீர்வு 07:

1 கிளாஸ் வெந்நீரில் ஒரு துளி புதினா எண்ணெய் கலந்து அருந்தினால் வாயுத் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 08:

ஒரு துண்டு பெருங்காயத்தை வறுத்து பொடியாக்கி சுடுநீரில் கலந்து அருந்தினால் வாயுத் தொல்லைக்கு சில நிமிடங்களில் தீர்வு கிடைக்கும்.

Exit mobile version