இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமற்ற உணவுகளால் நோய் பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.இதை மருந்து மாத்திரை இன்றி பாட்டி வைத்தியம் மூலம் எளிதில் குணமாக்கி கொள்ள முடியும்.
1.சளி
குப்பைமேனி இலையின் சாறை தேனில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி கரைந்துவிடும்.
2.அல்சர்
சோற்றுக்கற்றாழையின் ஜெல்லை அரைத்து மோரில் கலந்து குடித்தால் அல்சர் புண் ஆறும்.
3.தோல் நோய்
குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து சருமத்தில் பூசி வந்தால் தோல் நோய் குணமாகும்.
4.நோய் எதிர்ப்பு சக்தி
பெரிய நெல்லிக்காயை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5.சர்க்கரை
வெந்தயத்தை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
6.முடி உதிர்வு
செம்பருத்தி பூ மற்றும் சீகைக்காயை உலர்த்தி பொடியாக்கி தலைக்கு அப்ளை செய்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.
7.உடல் உஷ்ணம்
அருகம்புல்லை உலர்த்தி பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.இரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
8.புகை பழக்கம் கட்டுப்பட
வில்வ இலையை உலர்த்தி பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் புகை பழக்கம் கட்டுப்படும்.நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும்.
9.தேமல்
இரண்டு பூண்டு பற்கள் மற்றும் ஒரு வெற்றிலையை அரைத்து தேமல் மீது பூசினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.
10.மலச்சிக்கல்
எலுமிச்சை சாறில் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் மலக் குடலில் தேங்கிய கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.