தக்காளியை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள்!! பொலி விலுந்த முகம் பளபளக்க!!
அன்றாடம் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய தக்காளியில் உடலுக்கான ஊட்டச்சத்துகள் மட்டுமின்றி,முக அழகை அதிகரிப்பதற்கான அம்சங்களும் அதிகம் உள்ளது. தக்காளி மூலம் முக அழகை மெருகேற்றுவதற்கு சில குறிப்புகள் இந்த செய்தியில் பார்க்கலாம்..!
தக்காளியை வாரத்தில் நான்கு நாட்களுக்கு பயன்படுத்தி வருகையில் முகம் பொலிவை பெறும்.
தேவையான பொருட்கள்:
• தக்காளி
• மஞ்சள் தூள்
• நாட்டு சர்க்கரை
• முல்தானி மெட்டி
• கடலை மாவு
1. தக்காளியை இரண்டு துண்டாக வெட்டி அதில் நாட்டு சக்கரை போட்டு முகத்தில் வட்ட வடிவில் ஐந்து நிமிடம் தேய்த்து வருகையில் முகம் பளபளப்பாகும்.
2. தக்காளியை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். பிறகு கட்டியான உடன் எடுத்து முகத்தில் தேய்க்கவும்.
3. தக்காளியை முல்தானி மெட்டி மற்றும் கடலை மாவுடன் சேர்த்து முகத்தில் ஃபேஸ் பேக் போல் கலந்து மாஸ்க் போன்று போட வேண்டும்.
தக்காளியில் இயற்கையான சன்ஸ்கிரீன் லைகோபீன் உள்ளது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி நம் சருமத்தை அதிகமான புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. தினமும் தக்காளியை முகத்தில் தேய்த்து வருகையில் சூரிய கதிர்கள் மூலம் சருமத்திற்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கிறது.
இந்த குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை முகத்தில் பயன்படுத்தி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் உங்கள் முகம் உடனடியாக பிரகாசமாக மாறும்.