Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! 

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்!

மனிதர்கள் உயிர் வாழ இயற்கை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையை நாம் பாதுகாக்க இயற்கை நம்மை பாதுகாக்கும் என்பது முன்னோர்கள் கூற்று. அந்த வகையில்

மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக உள்ளது. மேலும் இதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில் தலவிருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.

கருங்காலி மரம் மின்காந்த கதிர்வீச்சுகளை தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது.

கருங்காலி வளையல் :மிகவும் பழமையான வயதான மரம் மற்றும் வைரம் பாய்ந்த கட்டையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் அதீத இறைசக்தி மற்றும் மருத்துவ குணங்களுடன், நன்கு முதிர்ந்த கருங்காலி மரத்தின் கட்டையில் சிறு சிறு மணிகளாக மாற்றி விரிவடையும் தன்மை கொண்ட நூலால் கோர்க்கப்பட்டதை தான் கருங்காலி வளையல் என கூறப்படுகிறது.

கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம் 27 மணிகளுடன் விரிவடையும் தன்மை கொண்ட இந்த கருங்காலி வளையலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம்.

கருங்காலி வளையலின் பயன்கள் :இறைசக்தி அதிகமுள்ள கருங்காலி வளையலை அணிவதால் உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, மன அமைதி ஏற்படும் என்பது முன்னோர்களின் கருத்து.

மேலும் பதற்றம், பொறாமை நீங்கி, எந்தவொரு செயலை தொடங்கினாலும் அதில் நல்ல முன்னேற்றத்திற்கான அனைத்து வழிவகைகளையும் உருவாக்கி தரும்.

மேலும் வாழ்வில் துன்பங்கள் மற்றும் கஷ்டங்கள் மறைந்து செல்வ வளம் கருங்காலி வளையலை பயன்படுத்தலாம்.

வறுமை மற்றும் மனக்கசப்புகள் நீக்கி வாக்கு சித்தி ஏற்படுத்துவதுடன், குலதெய்வ அருள் கிடைக்க செய்யும் என்பது நம்பிக்கை.

பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் வல்லமை கொண்ட கருங்காலி மரத்தின் கட்டையால் ஆன இந்த வளையலை நீங்கள் அணிந்தால், உங்களுக்கு ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கி நல்ல முன்னேற்றம் அடைவதற்கான வழிகளை அடைவோம் என்பது நமது முன்னோர்களின் வாக்கு.

 

 

Exit mobile version