பூசாரியை உயிருடன் கொளுத்தி கொல்ல முயற்சி !!

0
118

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஒரு கோவில் பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொன்ற சம்பவம் அரங்கேறி , பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாகி வருகிறது .இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசும் இயலாத நிலை அரங்கேறி வருகிறது. குறிப்பாக கிராமப் பகுதிகளிலும் ,படிப்பறிவு இல்லாத காரணத்தினாலும், மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பதனாலும் தான் , இச்சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதன் பட்டியல்களில் உத்திரப்பிரதேசம் முதலிடத்திலும் இராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் கரோலி மாவட்டம் பூக்ணா என்ற கிராமத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் கோவிலில் பூசாரியாக இருந்த பாபு வால் வைஷ்வ் (55) ,கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார் .இதனால் அவர் அந்தப் பகுதியிலேயே ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.மேலும், அந்த பகுதியிலேயே ஒரு வீடு கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல்ஜாதி வகுப்பினர் சிலர், வீடு கட்டும் இடம் தங்களுடையது என்று பூசாரியிடம் பிரச்சனை செய்துள்ளனர். ஆனாலும் பூசாரிக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் இருந்தனர்.இந்த விஷயத்தை ஊர்மக்கள், ஊர் பெரியவர்களிடம் கூறி பூசாரிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த மேல்சாதியினர், வீடு கட்டும் இடத்திற்கு சென்று குடிசையமைத்து இந்த இடம் எங்களுடையது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பூசாரியின் விளைநிலங்களையும் தீயிட்டு கொளுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பூசாரியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தினர். தீயில் எரிந்து நிலையில் அழரல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ,அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பூசாரி உயிரிலிருந்ததனையடுத்து ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பூசாரியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த பூசாரி குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பூசாரி உயிருடன் இருந்தபோது இறுதி வாக்குமூலமாக சொல்லப்பட்ட கைலாசா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களையும் தேடிவருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தற்போது பாஜக அரசு கையில் கொற்த்துள்ளது . ஹத்ரஸ் பகுதியில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து அரசியலாகியதோ, அதேபோல பாஜகவும், ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசினை கண்டித்து இவ்விவகாரத்தில் இறங்கியுள்ளது. இதனால் பாஜக-காங்கிரஸின் அரசியல் மோதலானது அதிகமாகி வருகிறது.