ஆந்திர மாநிலத்தில் இன்னொரு திருப்பதியா? பிரம்மாண்ட கோயிலை நிறுவிய மாநில அரசு!

0
110

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டி இருக்கின்ற ரிஷிகேஷ் மலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக புதிதாக ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவெடுக்கப்பட்டது.இதற்காக ஆந்திர மாநில அரசு திருப்பதி தேவஸ்தானத்திற்கு விசாகப்பட்டினம் மலையில் 10 ஏக்கர் நிலத்தை மானிய விலையில் கொடுத்தது. இதனை தொடர்ந்து கோவில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலவே ரூபாய் 28 கோடி செலவில் பிரமாண்டமான அளவில் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.

சென்ற மூன்று வருடங்களுக்கு முன்னர் 25 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கோவிலை கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. சென்ற மூன்று வருடங்களில் கட்டுமானப் பணிகளின் விலை ஏற்ற காரணமாக, மேலும் 3 கோடி ரூபாய் கூடுதலாக செலவிடப்பட்டு இந்த கோவில் கட்டப்பட்டு இருப்பதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கோவில் முழுவதும் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டு இருக்கிறது.கருவறையில் ஒரு அடி உயரத்தில் பீடமும் 7 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன ஏழுமலையான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் போலவே மலைக்குச் செல்ல ஒரு பாதையும், மலையிலிருந்து கீழே வர இன்னொரு பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தனியாக நடைபாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் முன்பதிவுகள் செய்வதற்கான வசதியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் சென்று தரிசிக்கலாம் இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு செல்லப்படும் லட்டுகள் விற்பனை செய்யப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து பூஜைகளும் விசாகப்பட்டினம் கோவிலிலும் வழக்கம்போல நடக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். எதிர்வரும் 13ஆம் தேதி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து ஒன்பதாம் தேதி அங்கு ரத்தினத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகி நடைபெற இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களின் சிரமத்தை போக்கும் விதத்தில் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த மக்கள் ரிஷிகேஷ் மலையில் இருக்கின்ற ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.