சீமானுக்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்த டிடிஎஃப் வாசன்..!!

0
258
TTF Vasan campaigned for Seaman..!!

சீமானுக்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்த டிடிஎஃப் வாசன்..!!

யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசனை தெரியாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் பிரபலம். 2கே கிட்ஸ்களை கவரும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியவர் தான் டிடிஎஃப் வாசன். அதிகமுறை காவல்நிலையம் சென்று வந்துள்ளார். இறுதியாக கூட பெரிய விபத்து ஒன்றில் சிக்கி இருந்தார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக்குகளை இயக்கி சாலைகளில் சாகசம் செய்து வருவதாக கூறி இவரின் ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதன் பின்னர் டிடிஎஃப் வாசனை அவ்வளவாக சோசியல் மீடியாக்களில் காண முடியவில்லை. இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் டிரெண்டாகியுள்ளார்.

அதன்படி டிடிஎஃப் வாசன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது கட்சி வேட்பாளர்களுக்காக அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக போராடி வரும் சீமானுக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம்.

அதன் காரணமாக பல்வேறு இடங்களில் சீமானுக்கு ஆதரவாக மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு இளைஞர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். அந்த வகையில் யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசனும் சீமானிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி மக்களிடம் பேசும் டிடிஎஃப் வாசன் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க. அண்ணனுக்கு ஓட்டு போடுங்க. ஒரு மாற்றம் வேண்டும் அல்லவா? நான் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிக்க போகிறேன்” என கூறி வருகிறார்.