Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஓராண்டுக்குள் வர உள்ளது. இதனை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் இதர கட்சிகளின் மேல் தொடர் குற்றங்களை சாட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அதிமுக மற்றும் திமுக குறித்து பல குற்றச்சாட்டை சுமத்தினார்.

அவர் பேசியதாவது, நடைபெற போகும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து தற்போது இருந்தே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கட்டாயம் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக பெரும் இடத்தை வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது சூழ்நிலையில் அதிமுக தலை இல்லாமல் முண்டமாக தான் திரிகிறது. ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து செயல்படாமல் தனித்தனியாக பிரிந்து விட்டனர்.

அதிமுக கட்சித் தலைவராக ஓபிஎஸ் இபிஎஸ் இருவரையும் தான் நீ தேர்தல் ஆணையம் நியமித்தது. ஆனால் தற்பொழுது இரு அணிகளாக பிரிந்ததால் யார் தலைவர் என்று தெரியாமல் அதிமுக உயிரற்ற வெற்று இயக்கமாக இருக்கிறது.

அதேபோல பொதுசெயலாளர் தேர்தல் வைக்காமலேயே இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் என்று கூறுவது மிகப்பெரிய குற்றம். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சி வந்துவிட்டால் அனைத்து துறைகளும் ஆக்டோபஸ் போல் நுழைய வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் சொல்லும் தேதியில் தான் அனைத்து படங்களும் வெளிவர வேண்டும். இவர்களை மீறி எந்த ஒரு பாடத்தையும் வெளியிட முடியாத நிலை உண்டாகியுள்ளது. இதைப் பார்க்கையில் மக்களாட்சி போல் இல்லை சர்வாதிகாரம் போல் இருக்கின்றது.

அனைத்து படங்களையும் ரெட் ஜெயின் நிறுவனமே வாங்கி தற்போது மிகப்பெரிய அரக்கனாக உருமாறி உள்ளது. விரைவில் இதற்கான நல்ல தீர்வு கிடைக்கும்.

Exit mobile version