Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மற்றவர்களுக்காக தியாகங்கள் புரிந்திடுவோமாக! டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்லதிற்கு ஆதரவு தெரிவிக்கும் உலகில் மற்ற எல்லாவற்றையும் விட தியாகத்திற்கு எப்போதும் தனி மதிப்பு இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எவ்வளவு இழப்புகள் நேர்ந்தாலும் மாற்றுக் குறையாத அன்புடன் மாறாத உறுதியுடன், தியாகங்களை செய்பவர்களுக்கு முழுமையான இறைவன் அருள் கிடைக்கும் என்பதற்குக் பக்ரீத் திருநாள் ஒரு சாட்சியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு தனக்கென்று வாழாமல் தியாகத்தின் சிறப்பும், வலிமையும், கொண்டிருப்பது மிகவும் சிறந்தவை எத்தனை நெருக்கடிகள், அவதூறுகள் உள்ளிட்டவை அவர்கள் மீது வாரி இறைக்க பட்டாலும் அதை எல்லாம் தாண்டி தியாகத்தின் பெருமை மேல் எழுந்து நிற்கும் அதனை யாராலும் மறைத்து மாற்றிவிட முடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.

அந்த விதத்தில் இறைவனின் தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் விதத்தில் இந்த புனித நாள் கொண்டாடப்படுகிறது. நமக்காக தியாகங்கள் புரிந்த அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம் மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் சக மனிதர்களின் நல்வாழ்விற்கும் அவரவர் அளவில் முடிந்தவரை தியாகத்தையும் தர்மத்தையும் செய்து சாதி மத வேற்றுமைகளை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து விடுவோம் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

Exit mobile version