Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு 

TTV Dinakaran

TTV Dinakaran

ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம்! திமுக செய்த தில்லுமுல்லு – டிடிவி தினகரன் தாக்கு

நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் இதை ஒழித்து விடுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக தற்போது நாடகமாடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு பொதுமக்களிடத்தில் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ?” என அவர் திமுகவை இது குறித்து விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்கள் குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்தது பொதுமக்களிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்த பிறகே இதுகுறித்து வெளியில் தெரிய வந்திருப்பதால், நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதன் பிறகும்கூட திமுக அரசு இப்பிரச்னையைப் பூசி மெழுகத்தான் முயற்சிக்கிறதே தவிர, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை.

‘ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று தேர்தல் நேரத்தில் திமுகவினர் செய்த தில்லுமுல்லு சத்தியம் அவர்களுக்கு வேண்டுமானால் மறந்து போயிருக்கலாம்; தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை” என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Exit mobile version