முதல்வர் தமிழகத்தில் இதுவரை மூச்சு காட்டாமல் இருந்த சில காலங்களுக்கு மூச்சு காட்டாமல் இருந்த டிடிவி தினகரன் திடீரென்று முதல்வரை விமர்சித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றிருந்தது இதனை குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூட கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தனக்கு பொருந்தாது என்ற நினைப்பில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது.
கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில் சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. திட்டமிட்டு ஆட்களை கூட்டி வந்து சமூக இடைவெளி இன்றி அவர்களை நிற்க வைத்து வரவேற்பு என்ற பெயரில் அரசு பிறப்பித்து இருக்கும் அத்தனை நோய் தடுப்பு விதிமுறைகளையும் மீறும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வரின் இவ்வாறு நடந்து கொண்டார்” என்று சாடியுள்ளார்.
“அரசின் விதிகளை முதலமைச்சரை மதிக்காமல் அரசு விழாவை நடத்தினார் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்?அதிமுக தொண்டர்களை பற்றி முதலமைச்சருக்கு அக்கறை இல்லாமல் போனாலும் அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரை காரணமாக இருப்பது குற்றம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கொடுமை பரவலுக்கு பொது மக்கள்தான் காரணம் என சித்தரிக்கும் முதல்வர் அதற்கு நேர்மாறாக தானே செயல்படுவது எவ்வகையில் சரியாக இருக்க முடியும் சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்பது போல் உள்ளது அவருடைய செயல்பாடு” என்றும் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
“மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த கொடுமை போதாதென்று முதலமைச்சர் பழனிசாமி செல்லுமிடமெல்லாம் மணிக்கணக்கில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து ஏற்கனவே கொரோனால் நொந்து போயிருக்கும் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகாரம் தரும் தடுமாற்றத்தில் போடும் இந்த ஆட்டங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்..அவர்களுக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.