Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான்

உதயநிதியை கண்டுகொள்ளாத தேவர் சமுதாயம் சிவி சண்முகத்தை டார்கெட் செய்தது ஏன்? தினகரனின் மாஸ்டர் பிளான்

உதயநிதி சசிகலாவை இழிவாக பேசிய போது அமைதியாக இருந்த இந்த சமுதாய மக்கள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியதற்கு மட்டும் ஆவேசமடைந்த ஏன்? என பலரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்நிலையில் குலம் என்றால் குடும்பம் என்று தான் பொருள்,ஒருவேளை நான் பேசியது அவர்களுக்கு சரியாக புரியாமல் இருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என அவர் விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுக்கு பஞ்சமே இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.குறிப்பாக அமமுக கட்சிக்கும், அதிமுகவுக்கும் ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில் தற்போது தேர்தல் வரும் சமயம் என்பதால் மேலும் அதிகமான கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுக கட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று தொடர்ந்து பேசி வந்தது தான் என்கிறார்கள்.

சசிகலாவின் வருகைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சசிகலாவின் வருகையை தெருக்கூத்து என்று கிண்டலாக ட்விட் செய்திருந்தார். அதைப்போல் அதிமுகவில் பல்வேறு அமைச்சர்களும் சசிகலாவிற்கு பயந்து அமைதியாக இருந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மட்டும் சசிகலா மீதும் டிடிவி தினகரன் மீதும் சரமாரியான கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

இதற்கு பதிலளிக்க முடியாமல் டிடிவி தினகரன் அமைச்சர் சி.வி சண்முகத்தை நிதானமாக பேச வேண்டும் என்று விமர்சனம் செய்தார் என்று கூறப்படுகிறது இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் என்னை நிதானமாக பேச சொல்கிறார் என்றால் டிடிவி தினகரன் தான் ஊத்தி கொடுத்தாரா என்றும், கூவத்தூரில் ஊத்தி கொடுத்தவர் டிடிவி தினகரன் தான் இது இல்லை என்று அவரால் மறுக்க முடியுமா? என்றும் ஊத்தி கொடுப்பது அவருடைய குலத்தொழில்,ஊத்தி கொடுத்தே தான் குடியை கெடுத்தவர்கள் அவர்கள் என கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் ஊத்தி கொடுப்பது அவருடைய குலத்தொழில் என்று பேசியதால் டிடிவி தினகரனின் சமுதாயத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் தேவர் சமுதாய மக்கள் அமைச்சருக்கு எதிராக பல்வேறு கண்டனங்களை தெரிவித்தனர்.இதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் உங்களுக்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வகிக்கும் பதவி மரியாதைக்குரியது அந்த மரியாதையை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ளுங்கள் என்று அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் அவர்கள் டிடிவி தினகரன் வைத்த குற்றச்சாட்டுக்கு மட்டுமே பதிலளித்தார் அமைச்சர் சிவி சண்முகம்,இதில் அவர் எந்த சமுதாயத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை என்றும்,உங்களுக்கு சாதி இருக்கிறது என்றால் அவருக்கு சாதி இருக்காதா? என  அமைச்சருக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

சட்டத்துறை அமைச்சருக்கு எதிராக தேவர் சமுதாய மக்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்ததால் தன்னுடைய பேச்சு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என அமைச்சர் சிவி சண்முகம் விளக்கமளித்திருந்தார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,நான் எந்த சமுதாயத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை எங்கள் பகுதியில் குலம் என்றால் குடும்பம் என்று தான் அர்த்தம் நான் டிடிவி தினகரன் குடும்பம் தான் ஊற்றி கொடுக்கும் குடும்பம் என்ற பொருளுடன் தான் பேசினேன்.

இது மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.அப்படி நான் பேசியது குறிப்பிட்ட சமுதாயத்திற்கு வேதனையை தந்தால் நான் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசி இருந்தார். மேலும் நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் தான் படித்து வந்தேன் அங்கு தான் எனக்கு அதிக நண்பர்கள் உள்ளார்கள். நான் தேவர் சமுதாயத்தை தவறாக பேசியதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது உண்மை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு சசிகலாவை மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். அப்போதெல்லாம் எங்கே போனார்கள் இந்த தேவர் சமுதாய மக்கள்? திமுகவுக்கு ஒரு நியாயம் அதிமுகவுக்கு ஒரு நியாயமா? என்று சிலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதியை கண்டுகொள்ளாமல் விட்ட தேவர் சமுதாய மக்கள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை மட்டும் எதிர்த்து பேசியது டிடிவி தினகரனின் பிளான் தான் என்கின்றனர்.குறிப்பாக இதன் மூலமாக தேவர் சமுதாய மக்களை அதிமுகவுக்கு எதிராகவும் தனக்கு ஆதரவாகவும் ஒன்று திரட்டுவது தான் அவருடைய திட்டம் என்கிறார்கள் அரசியல் ஆலோசகர்கள்.ஆனால் அதே நேரத்தில் இந்த சம்பவத்தை கவனிக்கும் போது சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக தொண்டர்களே அமைதி காத்த நிலையில் கட்சி சார்பில்லாமல் அவர் சார்ந்த வன்னிய சமுதாய மக்களும் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version