Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிடிவி தினகரன் போட்ட பக்கா பிளேன்! அச்சத்தில் அதிமுக தலைமை

டிடிவி தினகரன் போட்ட பக்கா பிளேன்! அச்சத்தில் அதிமுக தலைமை

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுக நாம் தமிழர் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் தனித்து களமாட தற்போது அந்த வரிசையில் அமமுககவும் இணைந்துள்ளது.

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் ஏ1 குற்றவாளியாக கர்நாடகா சிறையில் 4 வருட சிறை தண்டனை அனுபவித்து தற்போது மீண்டும் சசிகலா தமிழகம் வந்தார். ஓசூர் முதல் தமிழகம் வரை அமமுக கட்சியினர் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

தமிழகம் வந்த சசிகலா முதற்கட்டமாக எம்ஜிஆர் அவர்களுக்கும், ஜெயலலிதா அவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவை போலவே உடையை அணிந்து ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியை கொடி பறக்கவிட்டார்.

இந்நிலையில் எங்கே மீண்டும் சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்றி விடுவாரோ என்று பயந்து அதிமுக அமைச்சர்கள் சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் அவரை ஏன் அதிமுகவின் கொடியை பயன்படுத்தினார் என்று பல்வேறு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இதேபோல் பல கோடி செலவு செய்து மெரினாவில் தற்பொழுது திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதா சமாதியையும் சசிகலா வருகையால் இழுத்து மூடிவிட்டார்கள். சசிகலா மீண்டும் வந்ததால் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறி விடுவார் என்றும், கட்சியானது எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் கையைவிட்டு சென்று விடும் என்று பயந்தும் இவ்வாறாக சசிகலாவுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கபடுவதாக கருதப்படுகிறது.

அவர் அதிமுக கட்சியை கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது என்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு போகக்கூடாது என்றும் வேண்டுமென்றே இவ்வாறு முதலமைச்சரும் இவ்வாறு செயல்படுவதாக அமமுக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் என்னதான் அதிமுக தலைவர்கள் சசிகலாவை எதிர்த்தாலும், ஜெயலலிதா அவர்களின் உண்மையான தொண்டர்கள் சசிகலாவின் பின் தான் வருவார்கள் என்கிறார்கள் அமமுக கட்சியின் நிர்வாகிகள் ‌.

சசிகலா அவர்கள் மீண்டும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக அதிமுக கட்சியை வழிநடத்துவாரா அல்லது டிடிவி தினகரன் உடன் இணைந்து அமமுக கட்சியை வழி நடத்துவாரா என்ற இந்த பதட்டமான நிலையில் தற்போது டிடிவி தினகரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஒன்று ஆர்கே நகர் தொகுதி மற்றொன்று தேனி மாவட்டத்தில் உள்ள தொகுதி என்ற இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதில் ஆர் கே நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக ஏற்கனவே போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே ஆர் கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் நிச்சயம் மீண்டும் வெற்றி பெறுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version