செம டுவிஸ்ட்! திடீரென்று முக்கிய புள்ளியை நேரில் சந்திக்கும் டிடிவி தினகரன்!

0
128

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் மிகத்தீவிரமாக அதற்கான பணிகளை செய்து வருகின்றன. அந்த விதத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.அதிமுகவைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்பாளர் நேர்காணல் மற்றும் வேட்பாளர் தேர்வு அதேபோல வேட்பாளர் அறிவிப்பு என்று எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்து வருகிறது அந்த கட்சியின் தலைமை.

அதேபோல திமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்துக்கொண்டு தொகுதி ஒதுக்கீடு கூட்டணி பேச்சுவார்த்தை போன்ற எல்லா பணிகளையும் முடித்துவிட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் குதித்து விட்டனர் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்களும் அவருடைய மகனும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் அவர்கள் பல்வேறு இடங்களில் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் இதுவரையில், தேர்தலை சந்திக்காத உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக திமுகவின் கோட்டை என்று கருதப்படும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். இந்த தொகுதியனது கருணாநிதி காலம் தொட்டு திமுக வசம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.


பலமுறை திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இந்த தொகுதியில் நின்று பலமுறை வெற்றி பெற்று இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த தொகுதியில் திமுக தனி செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது.

அதன் காரணமாக, இந்த தொகுதியில் அவரை போட்டியிட வைத்தால் நிச்சயமாக வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போட்டு திமுக தலைமை அந்த தொகுதியில் உதயநிதியை நிறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனி கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறது. அந்த கூட்டணியில் தேமுதிக ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தாதுல் போன்ற கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதோடு அந்த கட்சிகளுக்கு இந்த கூட்டணியின் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கூட்டணியில் இதுவரையில் ஐந்து கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அவர்களை இன்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் இருக்கின்ற தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து உரையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.