நம்முடைய நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் இந்த நோய் தொற்றினால்11687பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்த பாதிப்பின் எண்ணிக்கையானது 10,25,059ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று இந்த தொற்றிலிருந்து சுமார் 7,071பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 927440ஆக இருக்கிறது. இந்நிலையில், நேற்று 53 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 13,258ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் உயிர்க்காக்கும் ஆக்சிசன் தேவையும் அதிகரித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஆக்சிசன் தேவை என்ற சூழ்நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தை கலந்து ஆலோசிக்காமல் அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்திருக்கிறார்.
இது போன்ற செயலை எந்த ஒரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள இயலாது தமிழகம் முழுவதிலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்துவிடக்கூடாது, அதேபோல நோய் மற்றும் தடுப்பூசியின் நிலையை அவரவர் இஷ்டத்திற்கு நிர்ணயிப்பதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.