நோய் தொற்று பரவல் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இணையதளம் மூலமாகவே கல்வியை கற்று வருகிறார்கள். 1 முதல் பதினோராம் வகுப்பு வரையில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்ற காரணத்தால், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தால் பராமரிப்பு, மின்சாரம், வாகன செலவுக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் தற்சமயம் நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவலால் பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருக்கும் நிலையில் இணையதளம் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே பராமரிப்பு மின்சாரம் வாகனம் போன்றவற்றுக்கான செலவு இல்லை என்பதால் கட்டணத்தை குறைக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் ராஜஸ்தானில் சிபிஎஸ்இ பள்ளிகள் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அரசின் உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை நிச்சயமாக குறைக்க வேண்டும் எனவும், இணையதளம் மூலமாக மாணவர்கள் கல்வி கற்று வருவதன் காரணமாக, பல வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவுகள் குறைந்து இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
