தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

0
198

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள 15 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதற்கு காரணம் அவசரக்குதியில் அமைக்கப்பட்ட மாற்று பாதையில் பஸ் செல்ல முடியாததால் என பொதுமக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து புதூர் கந்தசாமி புரா கிராமத்திற்கு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 74 ஏ என்ற அரசு பேருந்து நாளொன்றுக்கு காலை மதியம் மாலை என மூன்று முறை மட்டுமே ஏக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்து செல்லும் வழித்தடம் மூலமாக 15க்கும் மேற்பட்ட கிராமம் பயன்பெற்று வந்தனர்.

மேலும்  இந்த நிலையில் இந்த அரசு பேருந்தை பயன்படுத்தி இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள்  விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அரசு பேருந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள மாதாபுரம் கிராமத்தில் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் இப்பகுதி பொதுமக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை  அவசரக் கதியில் எழுந்த சரியான முன்னேற்பாடு இல்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாற்றி வருகின்றார்கள்.