TVK: தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். பாஜக அண்ணாமலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக சாட்டையடி போராட்டம் நடத்தியது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து தவெக விஜய் அவர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார். இன்று தமிழக மக்களுக்கு இந்த விவகாரத்தை கண்டித்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதன் பிறகு தவெக விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்கள் இந்த நிலையில்.
விஜய் தமிழக மக்களுக்கு எழுதிய கடித நகல் எடுத்து அக கட்சியினர் தமிழகம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக பொது மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை தி நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடித நகல்களை வினியோகம் செய்து உள்ளார்கள். அனுமதி இன்றி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து இருக்கிறார்கள்.
அவர்களை காண வந்த தவெக புஸ்ஸி ஆனந்த் அவர்களையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். எனவே புஸ்ஸி ஆனந்தை கைது செய்து இருப்பதை தவெக கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.