#TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ரத்து?? விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு!!

0
260
#TVK: Tamil Nadu Victory League conference cancelled?? Vijay's announcement!!

 

 

நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு தள்ளி போகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் சினிமாவை பொறுத்தவரை 100 குடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் அவர்களும் ஒருவர் ஆவார். இவர் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு தடைகளை நடிகர் விஜய் சந்தித்து வருகின்றார்.

கட்சி தொடங்கியவுடனே உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் தொடங்கப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு கொடியும் பாடலும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கடந்த மாதம் கட்சி நிர்வாகிகள் சில பேர் முன்னிலையில் கட்சியின் கொடியையும் கட்சியின் பாடலையும்  அறிமுகம் செய்து வைத்தார்.

கட்சிக் கொடி அறிமுகம் செய்த பின்னர் அதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் யானை, நட்சத்திரம், வாகை மலர் ஆகியவை இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து கட்சியின் முதல் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற தீவிரத்தில் இருந்த நடிகர் விஜய் அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் மாவட்டமாக சுற்றித் திரிந்து ஒரு வழியாக விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதன் பின்னர் செப்டம்பர் 23ம் தேதி மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் அவர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் ஆணைய அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். இதையடுத்து இதற்கு காவல்துறை 21 கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளித்து கொடுத்த மனுவை பரிசீலனை செய்த காவல்துறை 33 நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதி கொடுத்தது.

அதாவது மாநாட்டில் வருபவர்கள் அனைவரும் மாநாடு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும், அடிப்படை தேவைகள் செய்வது, மேடையில் இத்தனை பேர்தான் அமர வேண்டும், வாகன வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. முன்பு 150000 பேர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்பொழுது 50000 பேர் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநாடு நடத்துவதற்கு உண்டான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் எந்த பணிகளும் தொடங்காமல் அப்படியே கிணற்றில் போட்ட கல் போல இருப்பதாக கூறப்படுகின்றது. இதை வைத்து பார்க்கும் பொழுது தவெக கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து மாற்றி வைக்கப்படும் என்று தெரிகின்றது.

அதாவது தவெக தலைவர் விஜய் அவர்கள் மாநாட்டை அக்டோபர் மாதம் நடத்தலாம் என்று ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த வகையில் அக்டோபர் மாதம் 15ம் தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவ்வாறு அக்டோபர் மாதம் நடத்த முடியவில்லை என்றால் மாநாட்டை ஜனவரி மாதம் நடத்தலாம் என்றும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கூடிய விரைவில் மாநாடு நடத்துவதற்கான புதிய தேதியை விரைவில் தெரிவிக்கவுள்ளார்.