TVK: இது தான் பர்ஸ்ட்.. மாநாடு குறித்த அறிவிப்புக்கு முன்னர் முக்கியமான வேலை!!

0
143
TVK: This is the first..important work before the announcement of the conference!!

 

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுவதற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக கட்சியில் வேறு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அதன் பின்னர் சமீபத்தில் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து தவெக கட்சி மாநாடு நடத்துவதற்கு ஆக வேண்டிய வேலைகளை செய்து வந்தது.

தவெக கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு பின்னர் அனுமதி கடிதமும் காவல் துறையிடம் கொடுக்கப்பட்டது. காவல்துறையும் சில தினங்களுக்கு முன்னதாக 33 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது.

ஆனால் மாநாடு நடத்தும் தேதி நெருங்கியுள்ளதால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடத்துவதற்கு அனைத்து வேலைகளையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் அவர்கள் மாநாடு நடைபெறும் தேதியை அக்டோபர் மாதத்தில் தள்ளி வைத்துள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றது.

அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் மாநாடு நடத்துவதற்கு சில தேதிகளை தவெக கட்சி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்தது. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் அதாவது அக்டோபர் 10ம் தேதி அல்லது 15ம் தேதி நடத்தலாம் என்று ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்ற திட்டத்தில் நடிகர் விஜய் இருப்பதால் அதற்கான வேலைகளை வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் முதல் மாநாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மாநாடு நடைபெறுவதற்கான தேதியை அறிவிப்பதற்கு முன்னர் கட்சிக்கு மாவட்டச் செயலாளர்களை தவெக கட்சி நியமிக்கவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 தொகுதிக்கு மாவட்ட செயலாளர்களை தவெக கட்சி நியமிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மாவட்டச் செயலாளர்களை நியமித்த பிறகு அவர்களின் மூலமாக தொண்டர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைகளை தவெக கட்சி செய்யவுள்ளதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றது.

அது மட்டுமில்லாமல் பிரம்மாண்டமாக நடைபெறும் முதல் மாநாட்டுக்கு தேசிய கட்சி ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மாநாட்டுக்கு வரும் அந்த தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் கூறும் நிலையில் நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் அவர்கள் என்ன திட்டமிட்டுள்ளார் என்பதை பொறுத்திருத்து தான் பார்க்க வேண்டும்.